காத்தோடு காத்தானேன்

திரைப்படம் ஜெயில் 
பாடியவர்கள் Aditi Rao Hydari Dhanush  
வரிகள் கபிலன் 
மொழி தமிழ்  ENGLISH
      Kaathodu Kaathanen

ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

காகிதம் போலே ஒன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்
மோகத்தில் பெண்ணே உன்னாலே
முத்தங்கள் வாழும் முகமானேன்

இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

நானனா நானனா
நானனா நானனா
நானனா…… நானனா….
நானனா…… நானனா…….

இலையில் மலரின் கைரேகை
இமைகள் யாவும் மயில் தோகை
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே

மழலை போலவே மடியில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை

கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்
காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோம்…….ஓ….

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்….

பூவின் மீது கூத்தாடும்
போதை வண்டு போலானேன்
புல்லின் மீது பூமியைப் போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்

இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கரைகள் என்பதே இல்லை
கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை

வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்

இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்

Share