எதை நினைத்தோம்

திரைப்படம் காக்கா முட்டை
பாடியவர்கள் ஜி வி பிரகாஷ் குமார்
வரிகள் நா முத்துக்குமார்
மொழி தமிழ்  ENGLISH

ஆண் : எதை நினைத்தோம்
அதை அடைந்தோம்
அடைந்த பின்னே…ஏஹே
உண்மை நாம் உணர்ந்தோம்

ஆண் : எதை நினைத்தோம்
அதை அடைந்தோம்
அடைந்த பின்னே
உண்மை நாம் உணர்ந்தோம்

ஆண் : ஆசைக்குத்தான்
அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால்
வாழ்க்கை தொல்லையே

ஆண் : ஆசையைத்தான்….
வென்றவன் இல்லையே
அதை இன்றுதான்
உணர்ந்ததென் பிள்ளையே

ஆண் : புதுப் புது ஏக்கம்
அளித்திடும் தினம் தினம்
தூக்கம் கெடுத்திடும்

ஆண் : மனதினை திறந்து வைக்கையில்
இருப்பதை நெஞ்சம் ரசித்திடும்

ஆண் : எதை நினைத்தோம்
அதை அடைந்தோம்
அடைந்த பின்னே
உண்மை நாம் உணர்ந்தோம்

ஆண் : ஆசையில் ஏறி
மேகத்தில் போனோம்
குயில் முட்டை மேலே….
காக்கைகள் ஆனோம்

ஆண் : புல் நுனி மீதே
தூங்கிடும் பனியை ரசித்தால்
மின்னலின் ஒளியின் மீது கொண்ட
மயக்கம் விலகிடுமே

ஆண் : கிடைத்ததை எண்ணி
வாழ்ந்திடும் வாழ்வை ரசித்தால்
ஜன்னலின் கதவைத் தீண்டி
புதிய வெளிச்சம் வீசிடுமே ஏ….

ஆண் : எதை நினைத்தோம்
அதை அடைந்தோம்
அடைந்த பின்னே…ஏஹே
உண்மை நாம் உணர்ந்தோம்

ஆண் : ஆசைக்குத்தான்
அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால்
வாழ்க்கை தொல்லையே

ஆண் : ஆசைக்குத்தான்
அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால்
வாழ்க்கை தொல்லையே

ஆண் : ஓ ஓஒ ஓஒ
தரா ரா ரா தரா ரா ரா

animated-bee-image-0085 

Share