சல் சலே சல் சலே

திரைப்படம் காக்கா முட்டை
பாடியவர்கள் சத்யபிரகாஷ்
வரிகள் நா முத்துக்குமார்
மொழி தமிழ்  ENGLISH

ஆண் : {சல் சலே
சல் சலே சல் சல்
சரே சல் சலே
சல் சலே சல்} (2)

ஆண் : சல் சலே சல் சலே
சல் சலே சல் சலே
சிறகை விரித்து செல்
சல் சலே சல் சலே
சல் சலே சல் சலே
காற்றில் ஏறிச் செல்

ஆண் : போ போ வாழ்வே
காக்கா முட்டை தான்
கூட்ட விட்டா ஓட்ட சட்டைதான்

ஆண் : மழை வெயில் ரெண்டும்
எங்கள் அண்ணன் தம்பிதான்
நட்சத்திரம் வருவது
நம்மை நம்பிதான்

ஆண் : இங்கு வழி யாவும் நேரில்லை
சந்துல பொந்துல
போப் போப் போப் போடா
போப் போடா
புது இன்பம் தேடிப் போ

ஆண் : கண் பார்க்கும்
யாவும் உன் சொந்தம்
என்றெண்ணிப் போ போ
இன்னும் மேலே போ
தேரேனா ஆஅ…….

ஆண் : தூறல் வந்தால்
இங்கே கோணி குடை ஆகுமே
ஒரு குவாட்டர் பாட்டிலை
விளக்காய் மாற்றி
இருட்டை ஓட்டிடுவோம்

ஆண் : அட கட்டாந்தரையில் கைகளை நீட்டி
படுத்ததும் தூங்கிடுவோம்
சண்டைகள் அடிதடி இங்கும் உண்டு
நாள் தோறுமே

ஆண் : சட்டென அன்பாய் அணைத்திட ஓடும்
நம் நெஞ்சமே
கதவுகள் உண்டு முகவரி இல்லை
நம் வீதியிலே

ஆண் : அட யார் வீடும் நம்
வீடென்று எண்ணி வாழுகிறோம்
போப் போப் போப் போடா
போப் போடா
புது இன்பம் தேடிப் போ

ஆண் : கண் பார்க்கும்
யாவும் உன் சொந்தம்
என்றெண்ணிப் போ போ
இன்னும் மேலே போ
தேரேனா ஆஅ…….

ஆண் : டவ்வுசர் தபால் பெட்டி
தோஸ்து ஆட்டுக்குட்டி
தினம் அஞ்சே ரூபாய்
கெடச்சா போதும்
ஹீரோ நாங்களடா

ஆண் : அட அஞ்சான்கிளாச தாண்டல
ஆனா அனுபவம் அதிகமடா
கூவம் என்பது சாக்கடை
என்று யார் சொன்னதடா
கூவம் எங்களை தாய் மடியாக
தலாட்டுமடா
ராத்திரி எங்கள் கச்சேரிக்கு
வண்டுகள் பாடுமடா

ஆண் : அட ரேசன் கார்டு அதில் எங்கள்
நாய் பேர் சேர்ந்திடுவோம்
போப் போப் போப் போடா
போப் போடா
புது இன்பம் தேடிப் போ

ஆண் : கண் பார்க்கும்
யாவும் உன் சொந்தம்
என்றெண்ணிப் போ போ
இன்னும் மேலே போ
தேரேனா ஆஅ…….

ஆண் : {சல் சலே
சல் சலே சல் சல்
சரே சல் சலே
சல் சலே சல்} (2)

ஆண் : சல் சலே சல் சலே
சல் சலே சல் சலே
சிறகை விரித்து செல்
சல் சலே சல் சலே
சல் சலே சல் சலே
காற்றில் ஏறிச் செல்

animated-bee-image-0085 

Share