கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

திரைப்படம் வெற்றிக் கோடி கட்டு
பாடியவர்கள் அனுராதா ஸ்ரீராம்
வரிகள் வைரமுத்து
 
தமிழ் ENGLISH

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை
மயக்கும் 1000 வாட்ஸ் பவரு…
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

ஸாமி கருப்புதான் ஸாமி சிலையும் கருப்புதான்
யானை கருப்புதான் கூவும் குயிலும் கருப்புதான்
என்னை ஆசைப்பட்டு கொஞ்சும்போது
குத்துற மீசை கருப்புதான் அசத்தும் கருப்புதான் ( கருப்பு )

வெண்ணிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்புதான்
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புதான்
மண்ணுக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூட கருப்புதான்
மதுரை வீரன் கையிலிருக்கும் வீச்சருவா கருப்புதான்
பூமியில முதன் முதலா பொறந்த மனுஷன் கருப்புதான்
மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்புதான்

உன்னை என்னை ரசிக்க வைக்கும்……..
உன்னை என்னை ரசிக்க வைக்கும் கண்ணு முழி கருப்புதான்
கற்பு சொல்லி தந்த அந்த கண்ணகியும் கருப்புதான்
தாய் வயிற்றில் நாமிருந்த..தாய் வயிற்றில் நாமிருந்த
கருவறையும் கருப்புதான் வணங்கும் கருப்புதான்.. ( கருப்பு )

உன்னை கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்புதான்
ரெட்டை ஜடை பின்னலிலே கட்டும் ரிப்பன் கருப்புதான்
பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கருப்புதான்
அன்று முதல் எனக்குதான் பூக்கள் மீது வெறுப்புதான்
பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்புதான்
முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்குதான்

உன்னை பொத்தி வச்சிருக்கும்….
உன்னை பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கருப்புதான்
ஊரறிய பெத்துக்கலாம் புள்ளை பத்து கருப்புதான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு…ஹா…நம்மூரு சூப்பர் ஸ்டாரு
ரஜினிகாந்தும் கருப்புதான்..அழகு கருப்புதான்.. ( கருப்புத்தான்)

 

மேலும் விரும்பக்கூடும் :