சிரிப்பு வருது சிரிப்பு வருது

திரைப்படம் வெற்றிக் கொடி கட்டு
பாடியவர்கள் தேவா
வரிகள் தேவா
 
தமிழ் ENGLISH

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா இந்த
சின்னப் பொண்ணு யாரு உந்தன் செட்டப்பா
பொண்டாட்டிக்கு தெரிஞ்சுபுட்டா சித்தப்பா உன்
டப்பா கிழிஞ்சு போகுமய்யா சித்தப்பா

யப்பா யப்பா ஞானம் உங்கக்கா எங்கடா காணோம்
ரெண்டு ரவுண்டு உள்ளே உட்டா பொறக்குதப்பா ஞானம்
டபாய்க்கிறாடா கண்ணம்மா டபாய்க்கிறாடா
துபாய் போயிட்டு வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா ( சிரிப்பு )

சுங்குவாறு சத்திரம் சின்ன பொண்ணே பத்திரம்
சுங்கிடி சேலக் கட்டி வந்தா சித்தபுங்க சுட்டுடும்
கனகம்மா சத்திரம் காதுல கம்மலு பத்திரம்
காதலிக்கிற பேரச் சொல்லி கழட்டிடுவான் சுந்தரம்

மாம்பலம் ஸ்டேசனு பாண்டிபஜார் பேஷனு
மயிலாப்பூரு ஆன்டிகிட்ட கத்துக்கடா ட்யூஷனு
டபாய்க்கிறாடா கண்ணம்மா டபாய்க்கிறாடா
துபாய் போயிட்டு வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா ( சிரிப்பு )

தேவிகலா தியேட்டரு கூட வந்தது மேட்டரு
இன்ட்ரவெலு கேப்புல நான் ஊத்திக்கிட்டேன் க்வாட்டரு
ஆறுவாரு போர்ட்டரு அவருக்கொரு டாட்டரு
ஆட்டோவுல ஏத்தினு போனா ஏறுதடா மீட்டரு

காரைக்குடி ஆச்சிங்கோ ராமுழுக்க பேச்சுங்கோ
சின்ன வீடு வச்சதால வாங்குதம்மா மூச்சுங்கோ
டபாய்க்கிறாடா கண்ணம்மா டபாய்க்கிறாடா
துபாய் போயிட்டு வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா ( சிரிப்பு )

 

மேலும் விரும்பக்கூடும் :