தில்லேல்லே தில்லேல்லே

திரைப்படம் வெற்றிக் கொடி கட்டு
பாடியவர்கள் கிருஷ்ணராஜ், ஷங்கர் மகாதேவன்
வரிகள் கலைக்குமார்
 
தமிழ் ENGLISH

தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே
தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே
தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே
தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே…..

ஒழைச்சு ஒழைச்சு பாரு இந்த
ஒலகம் உயரும் பாரு ஒலகம் உயரும் பாரு
தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே
தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே

அட வேர்வ மழைய பெஞ்சா இந்த
மண்ணு மாறும் பாரு அதில்
பொன்னு விளையும் பாரு
தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே
தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே….

சோறு போடும் கூட்டம் மட்டும்
நல்ல சோறு உண்பதில்லை
வேர்வை சிந்தும் தோழா நீ
விருந்து உண்ண வேணும் நீ
உண்ண மிச்சம் போக இந்த
உலகம் உண்ண வேணும்….

தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே
தில்லேல்லே தில்லேல்லே தில்லேல்லே
ஆனந்தம் ஆனந்தம் ஆரம்பம் ஆரம்பம்
ஆரம்பம் ஆனந்தமே…

அலைக்கடலாய் எண்ணாதே அது
துளியாய் துளியாய் சேர்ந்ததுதான்
மலை மலையென எண்ணாதே அது
துகளாய் துகளாய் சேர்ந்தது தான்

உந்தன் வாழ்க்கை நிறையட்டும்சொட்டு சொட்டாக
காலம் அள்ளிக் கொடுக்கட்டும் கட்டுக் கட்டாக
நீ பால் பாலாக அட பல நாள் வாழ்க
உன் கட்டுத்தறியில் காமதேனுவாம் ஊரில் சொன்னாங்க
ஆனந்தம் ஆனந்தம் ஆரம்பம் ஆரம்பம்
ஆரம்பம் ஆனந்தமே…

பூட்டிக் கெடக்கு பூமி அதில் புதையல் இருக்கு சாமி
புதையல் இருக்கு சாமி தில்லேல்லே தில்லேல்லே
அட பூட்ட தெறக்க பாரு உன் பத்து விரலும் சாவி
பத்து விரலும் சாவி தில்லேல்லே தில்லேல்லே

திறமை இங்கே தோற்பதில்லை இத
தெரிஞ்சவங்க வீழ்ந்ததில்ல
மனுஷன் வேறு இல்ல இந்த மண்ணு வேறு இல்ல
மனுஷன் உயரும்போது இந்த மண்ணில் ஏது தொல்ல
ஆனந்தம் ஆனந்தம் ஆரம்பம் ஆரம்பம்
ஆரம்பம் ஆனந்தமே…

பசுவுக்கு நீர் தருவோம் அட பாலில் தண்ணீர் இல்லையடா
பால் விற்ற பணமெல்லாம் அடடா அடடா வெள்ளையடா
பால் கறக்கும் சத்தம் கேட்டு ஊரே விழிக்கும்
ஊர் விழிக்கும் போது எங்கள் வாழ்க்கை செழிக்கும்
அட இப்பாலைப் போல் இதற்கப்பால் ஏது
ஒரு பாலாறும்தான் வத்தும் எங்கள் பாலோ வத்தாது ( ஆனந்தம்)

மேலும் விரும்பக்கூடும் :