லட்ச லட்சமா பணம்

திரைப்படம் வெற்றிக் கொடி கட்டு
பாடியவர்கள் ஷங்கர் மகாதேவன்
வரிகள் ஆர் ரவிஷங்கர்
 
தமிழ் ENGLISH

யாயாயாயாயாயாயா….
ஹே..லட்ச லட்சமா பணம் வரப் போகுது
தேங்க்யூ கிருஷ்ணா தேங்க்யூ ஜீசஸ் தேங்க்யூ அல்லாஹ்
ஹே..கோடி கோடியாய் பணம் கொட்ட போகுது
தேங்க்யூ கிருஷ்ணா தேங்க்யூ ஜீசஸ் தேங்க்யூ அல்லாஹ்

தேங்க்யூ..கிருஷ்ணா…..ஜீசஸ்…..அல்லாஹ்….
லைலா ஓ லைலா நீ ஆடு ஸ்டைலா
ஐஸ்வர்யாராயும் ஓய்ப்பா வருவாளா

கம்பங்கூழுக்கு…….குட் பை குட் பை
காய்ஞ்ச பூமிக்கு..குட் பை குட் பை
கிழிஞ்ச பேண்ட்க்கு….குட் பை குட் பை
கிழவி ஏச்சுக்கு குட் பை…..
தேங்க்யூ..கிருஷ்ணா…..ஜீசஸ்…..அல்லாஹ்….( லட்ச )

மாடு மேய்க்கும் முத்தய்யா
ஒட்டகம் மேய்க்க போறியா
மண்ணெண்ன வித்த காத்தவராயா
பெட்ரோல் ஊற்றில் வேலையா ஹூ..ஹூ..

வேலையில்லா ஊரெல்லாம்
கங்கை பாய்ந்தும் பாலைவனம்
வேலைக் கொடுக்கும் ஊர்தானே
எங்களுக்கெல்லாம் சோலைவனம்

பைசா பஞ்சம் அழியட்டும் பட்டித்தொட்டியிலே
டாலர் மழையா பொழியட்டும் ஏழை வீட்டினிலே
டிப்ளமா படிப்பெல்லாம் இங்கே தெருவிலே நிக்குதுங்க
நாங்க டிகிரியே முடிக்கலையே எங்க டிகினிட்டி ஏறுதுங்க
யாயாயாயாயாயாயா….
தேங்க்யூ..கிருஷ்ணா…..ஜீசஸ்…..அல்லாஹ்….( லட்ச )

ஓலைப் பாயில் படுத்தபடி
கோடி கனவுகள் கண்டோமே
ஊருக்குள்ளே மூணு மாடி
வீடு கட்டப் போறோமே

அம்மா சேலையை ரெண்டாக்கி
தாவணி போடும் தங்கச்சி
பாரீன் துணியை மலைமலையாய்
வாங்கி குவிப்பான் அண்ணாச்சி

முதுகு வளைஞ்ச குடும்பமெல்லாம் நிமிர போகுதுங்க
இருட்ட பார்த்த கண்களிலே வெளிச்சம் தெரியுதுங்க
திரைக்கடல் ஓடுகிறோம் நாங்கள் திரவியம் தேடுகிறோம்
குடிசையை பிரிச்சு விட்டு தங்கக் கூரையை போடுகிறோம்
யாயயயாயாயா யாயாயாயாயாயா…( லட்சம் )

 

மேலும் விரும்பக்கூடும் :