துளி துளியாய் கொட்டும்

திரைப்படம் பார்வை ஒன்றே போதுமே
பாடியவர்கள் ஹரிகரன், ஸ்வர்ணலதா
வரிகள் பா விஜய்
தமிழ் ENGLISH

*ஆண் :*துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

*பெண் :*ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

*ஆண் :*பூவென நீ இருந்தால்
இளம் தென்றலை போல் வருவேன்
நிலவென நீ இருந்தால்
உன் வானம் போலிருப்பேன்

*பெண் :*துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

*பெண் :*பூமியெங்கும் பூ பூத்த பூவில்
நான் பூட்டி கொண்டே இருப்பேன்
*ஆண் :*பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால்
நான் காற்று போல திறப்பேன்

*பெண் :*மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும்
தூறல் போலவே நானும் அந்த
மேகம் அதில் வாழ்கிறேன்

*ஆண் :*காற்றழுத்தம் போல வந்து
நானும் உன்னை தான்
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்
*பெண் :*ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி
ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட

*பெண் :*துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

*ஆண் :*நீலவானில் அட நீயும் வாழ
ஒரு வீடு கட்டி தரவா
*பெண் :*நீலவானில் என் கால் நடந்தால்
விண்மீன்கள் குத்தும் தலைவா

*ஆண் :*ஓரக் கண்ணில் போதை கொண்டு
நீயும் பார்க்கிறாய்
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்
*பெண் :*பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்
*ஆண் :*கனவுகள் வருதே கனவுகள் வருதே
காதலியே உன்னை தழுவிட தழுவிட

*ஆண் :*துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

 

மேலும் விரும்பக்கூடும் :