தமிழ்நாடு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்த 14 வேட்பாளர்கள்!

மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்த 14 வேட்பாளர்கள்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

தமிழக சட்டசபை தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 14 வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. திமுக கூட்டணி 98 தொகுதிகளைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது.


இந்நிலையில், இந்தத் தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தங்களது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.

அவர்களின் முக்கியமானவர் ராதாபுரம் திமுக வேட்பாளர் அப்பாவு. இவர் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்,

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தனது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

இதேபோல், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியை தவறவிட்ட மற்ற வேட்பாளர்களின் விபரமாவது:-

திண்டிவனம் - ராஜேந்திரன் ( அ.தி.மு.க) - 101 வாக்குகள்செய்யூர் (தனி) - முனுசாமி ( அ.தி.மு.க ) - 304 வாக்குகள்கோவில்பட்டி - சுப்பிரமணியன் (தி.மு.க) - 428 வாக்குகள்கரூர் - சுப்பிரமணியன் (காங்கிரஸ் ) - 441 வாக்குகள்ஒட்டப்பிடாரம் - கிருஷ்ணசாமி ( தி.மு.க. கூட்டணி - புதிய தமிழகம்) - 493 வாக்குகள்பெரம்பூர் - என்.ஆர்.தனபாலன் (தி.மு.க. கூட்டணி - பெருந்தலைவர் மக்கள் கட்சி ) - 519 வாக்குகள்திருவிடைமருதூர் (தனி) - சேட்டு (அ.தி.மு.க.) - 532 வாக்குகள்திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க. ) - 601 வாக்குகள்திருமயம் - வைரமுத்து ( அ.தி.மு.க. ) - 766 வாக்குகள்பரமத்தி வேலூர் - ராஜேந்திரன் ( அ.தி.மு.க. ) - 818 வாக்குகள்திருப்போரூர் - விஸ்வநாதன் ( தி.மு.க. ) - 950 வாக்குகள்பர்கூர் - கோவிந்தராஜன் ( தி.மு.க ) - 982 வாக்குகள்

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்