பானை ஓட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள்

புதுக்கோட்டை மாவட் டம் மதகம் கிராமத்தில் கிடைத்த பானை ஓட்டில்
தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பானை ஓடு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், மதகம் என்ற கிராமத் தில் சாலை ஓரமாக அமைந்தி ருக்கும் கருளாநாதர் ஊரணிக் கரையில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடு கிடைத் துள்ளது. இதை புதுக் கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் வர லாற்றுத்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் சந்திரபோஸ் கண்டுபிடித்தார். அப்போது கல்வெட்டு ஆராய்ச்சியாளர் மேலப் பனையூர் ராசேந்திரன், ஆய்வி யல் நிறைஞர் பட்ட மாணவர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடு கி.மு. முதல் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த பானை ஓடு 12 செ.மீ. நீளமும் 8 செ.மீ அகலமும் கொண் டதாக உள்ளது. பானை ஓட்டில் “கதிர் அம்ஞ்” என்று தமிழ் பிராமி எழுத்தில் இரண்டு விதமான பெயர்ச் சொற்களாக எழுதப்பட்டுள் ளன. முதலில் இடம் பெற்று உள்ள “கதிர்” என்பது சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். “கதிரவன்” என்று சூரியனை அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது. “கதிர்” என்ற சொல் சங்க இலக்கியங்களில் மணி மேகலை, சிலப்பதிகாரம், அக நாநூறு, கலித்தொகை, குறுந் தொகை, நற்றினை, புறநாநூறு ஆகியவற்றில் இருந்து வந்தி ருக்கின்றன.
தமிழ் பெயர்களில் ஒன்று...
இரண்டாவது பெயர் சொல்லாக அம்ஞ் என்று பானை ஓட்டில் எழுதப் பட்டிருப்பது அம்பலம், அம்பர் கிழான், அம்மள்ளனார், அம்மெய்யராகனார், அம் மெய்யன், அம்மூவனார் ஆகிய சங்க இலக்கியங்களில் வழங்கி வந்த பெயர் சொற்க ளில் ஒன்றாக அல்லது அம்ஞ் என்று தொடங்கும் தமிழ் பெயர்களில் ஒன்றாக இருக் கலாம்.
தஞ்சை தமிழ் பல்கலை கழகம் கடல் சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் ராசவேல் “கதிர் அம்ஞ்” என்ற ஆய்வாளரின் வாசிப்பை சரியானதென்று உறுதி செய் துள்ளார்.
ஆள் பெயர்
கொடுமணல், அழகன்குளம், ஆண்டிப்பட்டி, மாளிகைமேடு போன்ற ஊர்களில் கிடைத்த பானை ஓடுகளில் பெயர் சொற்களே இடம்பெற்று உள்ளன. எனவே, மதகத்தில் கிடைத்திருக்கும் இந்தப் பானை ஓட்டில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டி ருப்பது ஒரு ஆளின் பெயர்தான் என்று உறுதியாகக் கூறலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் பிராமி கல் வெட்டுகள் சித்தன்ன வாசல், குடுமியான்மலை, பொற் பனைக்கோட்டை போன்ற இடங்களில் கல்லி லும், மலைக்குகையிலும் கிடைத்திருக்கின்றன. ஆனால், பானை ஓட்டில் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் இது ஒரு அரிய கண்டுபிடிப்பாகும்.