சாதனைகள் விழி இழந்தாலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் மனவலிமை ஆசிரியர்

விழி இழந்தாலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் மனவலிமை ஆசிரியர்

பதிவர்: நிர்வாகி, வகை: சாதனைகள்  
படம்

அக் 04,2015:- ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 9 10ம்வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக முத்துசாமி (33) பணிபுரிந்து வருகிறார்.விழி திறன் இல்லாத இவர் சத்திரக்குடி அருகே உள்ள செவ்வூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் .குடும்பத்தில் யாரும் பள்ளி படிப்பை தாண்டாத நிலையில் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று இன்று எம் ஏ பி எட் எம்பி தமிழ் முதுகலை பட்டதாரி ஆசிரியராக மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார். தமிழ் ஆசிரியர் முத்துசாமி கூறுகையில், பிறவியில் இருந்தே எனக்கு முழுமையாக விழியில் பார்வை ஒளி கிடையாது.

பிரய்லி எனப்படும் தொடு உணர்வு கேட்டல் உச்சரித்தல் முறையிலும் கல்வி பயின்றுள்ளேன் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தூய்மையான தமிழ் உரையாடல் மூலம் பாடங்களை கற்று தருகிறேன். கரும்பலகையில் எழுதி காண்பிப்பதற்கு மாணவர்களின் உதவியை நாடுகிறேன்.என்னிடம் பயிலும் மாணவர்கள் வகுப்பில் குறும்பில் ஈடுபடாமல் அப்படியே பாடத்தை கற்று கிரகித்து கொள்கின்றனர். சொந்த அத்தை மகளை ஓராண்டிற்கு முன்பு திருமணம் செய்தேன். பள்ளியின் காலை பிரார்த்தனையில் மாணவர்களுக்கு தன்னமிக்கை குறித்த கருத்துக்களை விதைத்து வருகிறேன்.

ஓய்வு வேளைகளில் நீதி போதனை ,பாடல் சமுதாய விழிப்புணர்வு கருத்துக்களை உரக்க சொல்லி பிஞ்சு மனங்களுக்கு உரமேற்றுவேன் மேலும் தமிழ் சங்கம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் பட்டிமன்றன் சொற்பொழிவுகளிலும் பங்கேற்கிறேன். வசதியற்ற மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வதை பெருமையாக கருதுகிறேன்.அனைத்து திறமைகளும் ஒவ்வொருவருக்குள்ளும் குடி கொண்டுள்ளது. அதனை வெளி கொண்டு வருவதே கல்வி ஆகும் குறைகளை நினைத்து வருந்தாமல் தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் வெற்றி எப்போதும் நம்முடன் இருக்கு என்கிறார்.. இவரின் தொடர்பு எண். 97863 26166

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்