சவுதியை மிரட்டும் அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட தங்கள் நாட்டின் ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தொடர்ந்து பல மாகாணங்களிலும் முன்னிலையில் இருந்து வருபவர் டொனால்ட் டிரம்ப். அடுத்த அமெரிக்க அதிபர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக டிரம்ப் கருதப்பட்டாலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதங்களில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தனது வெளியுறவுக் கொள்கை குறித்து நீண்ட பேட்டி ஒன்றை டிரம்ப் அளித்துள்ளார்.
அதில் அவர், ‘ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட தங்கள் நாட்டின் ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும்' என அவர் எச்சரித்துள்ளார்.
அதோடு, அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சவுதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும் எனவும் அதில் அவர் மிரட்டியுள்ளார்.