தமிழர் சிறப்புகள் தமிழர்களின் சிறப்புகள் - 1

தமிழர்களின் சிறப்புகள் - 1

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழர் சிறப்புகள்  
படம்

பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர், அரேபி யருடனும், கிரேக்கருடனும், உரோம ருடனும், ஜாவனியருடனும் மற்ற அயல் நாட்டினருடனும் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்ற கூறுகிறார். இதை எடுத்துக்காட்டும் வகையில் நில நூலாசிரியர்கள் பிளினி (கி.பி. 75), தாலமி (கி.பி. முதல் நூற்றாண்டு) மற் றும் செங்கடற்பயணம் ஆய்வுக்குறிப்புக் கள் கடைசியில் (Periplus Maris Erithrerien) எரித்திரையன் இந்துமாக் கடல் போன்ற நூல்களில் குறிப்பிடப் படும் தமிழகத்தில் இருந்த துறைமுக நகரங்களை விரிவாக ஆய்வு செய் துள்ளார்.

அவற்றில் சில நகரங்கள்:

1. பாலைப்பட்டினம்: (palae Patme) Dabhol என்று தற்போது குஜராத்தில் விளங்குகின்றது.

2. மந்தராகிரி: (Mandagore) Bankote என்று தற்போது பெயர் பெற்றுள்ளது. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. கப்பல் கட்டுமான நகரமாக விளங்கியது.

3. கண்ணனூர்: கேரளாவில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

4. Baryagaza: குஜராத்தில் உள்ள புரோச் (Broach).

5. Colchi - தற்போதுள்ள Cochi சிலப்பதிகாரத்தில் கொற்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6. Kayal - Morcopola வால் Coil என்று குறிப்பிடப்பட்டுள்ள நாகர் கோவில்.

7. Tyndis- (பொன்னானி) தமிழகத் தின் முதல்தர துறைமுகம் (மஜும்தார் இதனை தமிழகத்தின தொண்டி துறைமுகம் எனக் கூறுகிறார்).

8. முசிறி (Cranganore) கேரளாவில் உள்ளது. அரபு நாட்டுடன் கடல் வணிகம் நடந்தது.

9. நீல்கண்டா (Nelganda என்று Fabricius என்பரால் அழைக்கப்பட்டது. Melkynda என்று கால்டுவெல் அழைத் தார்). இது கோட்டயம் அருகே உள் ளது.

10. Camara (காவிரிப்பூம்பட்டினம்)

11. Poduca (பாண்டிச்சேரி) அரிக் கமேடு ஆய்வுகள் இதனை உறுதிப் படுத்தியுள்ளது.

12. Supatana (Fairtown) (சென்னைப் பட்டினம்) மதராஸ் என்ற அழைக் கப்பட்ட சென்னை. இந்த துறைமுகம் கங்ககைக்கரை வரை இணைப்புச் சாலைகள் கொண்டது).

13. Maisolai or Ma Solia இது மசூலிப்பட்டணத்தை குறிக்கின்றது. இங்கிருந்து மரக்கலங்கள் (Vessels) சைனா, மெக்கா, சுமத்ரா போன்ற நாடுகளுடன் வாணிகம் நடந்தது.

14. கண்டசாலா: இந்த துறைமுகம் கிருஷ்ணா நதி முகத்துவாரத்தில் உள்ளது. இது சுவர்ண தீவுடன் வாணிபத் தொடர்பு கொண்டது.

15. சரித்திரபுரா: சீனாவின் யுவான் சுவாங்கினால் குறிக்கப்பட்டுள்ளது. இது ஒரிசாவில் உள்ளது.

16. Paloura (பாலூரா) ஒரிஸ்ஸாவில் உள்ளது. பர்மாவுடன் வணிகம் நடந்தது.

17. தாம்ரலிப்தி (Tamaralipti): வங்கா ளத்தில் உள்ளது. மவுரிய பேரரசர் அசோகர் இங்கு வந்தார். அப்போது போதிமரத்தின் கிளை தாம்ரபோன் என்றழைக்கப்பட்ட சிலோனுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் கிரேக்க நாட்டில் இருந்து வந்த மார்க்கோபோலோ மற்றும் நிக்கோலா கோண்டி (Nichoicolo Conti) ஆகியோர், தென்னிந்தியர்கள் கப் பல்கள் கட்டும் துறையில் சிறந்து விளங்கினார்கள்.

அவர்கள் கட்டிய கப்பல்கள் 25 யானைகளை ஒரே சமயத்தில் ஏற்றிச்செல்லக் கூடிய வலிமை பெற்றவைகளாக விளங்கின என்று கூறினார்கள். தமிழில் நாவாய் என்ற சொல்லே ஆங்கிலத்தில் Navy என மாறியது. இது தமிழின் சிறப்பு மற்றும் கடல் வணிகத்தின் சிறப்பு ஆகும்.

எனவே முதல் மனிதன் திராவி டத்தை உள்ளடக்கிய லெமூரியர்கள் முதல் தற்போதுள்ள திராவிடர்கள் வரை (குமரி முனை முதல் கங்கைக் கரையைத் தொடும் விந்திய மலை வரை பரவியவர்கள்) கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கி பொன்னும், மணியும் குவித்தனர் என்பதை அறியலாம். பெருகிய செல்வம் இலக்கியங்கள் படைக்க உதவின. திராவிடம் என்பதும் திருவிடம் என்பதும் திரைகடல்களால் சூழ்ந்த திரைவிடமாக விளங்கியது.

ஆரிய இலக்கியங்கள்

இந்தியாவின் தொன்மையான மொழிகள் தமிழும், சமஸ்கிருதமும் ஆகும். சமஸ்கிருதம் இன்று எந்த மாநில மக்களாலும் பேசப்படவில்லை. 2001இல் சமஸ்கிருதம் பேசுபவர்கள் எண்ணிக்கை 14135 (ஆதாரம் Encyclopedia of wicky pedia). சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை. (இந்துமத தர்ம வினா _ விடை -_ ஆசிரியர் சங்கராச்சாரியார்) இதற்கு இலக்கணம் அமைத்து சமஸ்கிருதம் என்று பெயரிட்டவர் பனை என்ற ஊரில் பிறந்த கி.மு. 400 அய் சார்ந்த பாணினி (Panini) என்பவர் ஆவார்.

1. எரித்திரையன் கடற்பயணம்: செங்கடற்பயணம் அல்லது செங்கடல், பாரசீக வளைகுடா மற்றும் இந்துமாக் கடல் அடங்கிய கடற்பயணம்

2. Ratnaray - அரபிக்கடல்

3. Mahadadhi - வங்காள விரிகுடா

4. பாணிணி எழுதிய இலக்கணம் நூல் (சமஸ்கிருதம்) எட்டு அத்தியா யங்களைக் கொண்டது. எனவே அஷ்டத்யாயி என அழைக்கப்பட்டது. இது தமிழ் மரபின்படி அமைந்த பெயர்.

உதாரணம்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, நாலடியார். சமஸ்கிருதம் தோன்றி பலகாலம் இலக்கியங்கள் இயற்றப்படவில்லை.

கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தில் இலக்கியம் என்று எதுவுமே கிடையாது. சமஸ்கிருதத்திற்கு மாறாக தமிழ் பல. இலக்கியங்களைக் கொண்டிருந்தது. அவை தமிழர் வாழ்க்கை மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகள் பற்றியும் பல அரிய தகவல்களை தந்தன.

இதிகாசங்கள்

வேதகாலத்தில் இயற்றப்பட்ட ரிக்வேதம் அவெஸ்தன் என்ற பாரசீக நூலின் இந்திய பதிப்பு ஆகும். இதனை தொடர்ந்து யஜுர், சாம அதர்வன வேதங்கள் ஆகும். பின்னர் இராமா யணம், மகாபாரதம் போன்ற காவி யங்கள் கி.மு. 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை இயற்றப் பட்டன. ஆனால் இவை அனைத்தும் எழுத்து வடிவில் எழுதப்பட்டவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான். இவை நடந்தது ஏறக்குறைய குப்தர்கள் ஆட்சிகாலத்தில்தான்.

இராமாயணத்தில் வால்மீகியால் சில காண்டங்கள் புனையப்பட்டன. பிற் காலத்தில் அயோத்தியா காண்டம், பால காண்டம், உத்ரகாண்டம் முதலியன மற்ற ஆசிரியர்களால் எழுதி சேர்க்கப்பட்டன. இதேபோல் மகா பாரதத்தின் உண்மையான காவிய நாயகன் அர்ஜுனன். இவனின் வில் லாற்றலினையே மூல பலமாகக் கொண்டு பல வீரச்செயல்கள் நடை பெற்றன.

இப்பேர்பட்ட மாவீரன் போர்க்களத்தில் மனச்சோர்வடைந்து போரிட மறுப்பதாக சித்திரிக்கப் பட்டுள்ளது. அவனை போரில் ஈடு படுத்தும் பணி பரமாத்மா கிருஷ்ண னால் பகவத்கீதை மூலமாக நிறை வேற்றப்படுகின்றது. இந்த பகவத்கீதை மகாபாரதம் இயற்றிய பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து பிற்சேர்க்கை யாக சேர்க்கப்பட்டதாகும். வீரத்தை சித்திரிக்கவேண்டிய நூல் பக்தி நூலாக மாற்றம் அடைந்தது.

தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள்:

அரசர்களையும், கடவுள்களையும், மதச்சடங்குகளையும் மய்யமாக வைத்து புனையப்பட்டவை சமஸ்கிருத இலக்கியங்கள். தமிழர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தார்கள். முதல் தமிழ்ச்சங்கம் 4400 ஆண்டுகள் தென் மதுரையில் இருந்தது. இந்த முதல் சங்கத்தில் 4449 புலவர்கள் தங்கள் படைப்புகள் சமர்ப்பித்தார்கள். இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் நடைபெற்றது.

அதில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர் பாண்டுரெங்கன் திரையன் மாறன் (துவாரகை மன்னன்). இந்தச் சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்களில் தொல்காப்பியமும், அகத்தியமும் அடங்கும். இறுதியாக தற்போதைய மதுரையில் கடைச்சங்கம் 1850 ஆண் டுகள் நடைபெற்றது. எனவே சங்க காலம் (4449+3700+1850 = 9999) ஆண் டுகள் கொண்ட ஒரு நீண்ட நெடிய காலம். இது தமிழ் நீண்ட காலம் சிறப்புடன் இருந்ததை அறியலாம்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்