தமிழ் செய்திகள் சிங்கப்பூரில் 14வது உலகத் தமிழ் மாநாடு துவக்கம்- 3 நாட்கள் நடைபெறும்!

சிங்கப்பூரில் 14வது உலகத் தமிழ் மாநாடு துவக்கம்- 3 நாட்கள் நடைபெறும்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ் செய்திகள்  
படம்

சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. சிங்கப்பூரில் மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் இது நடைபெறுகிறது.

தமிழ் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் இந்த 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து 250 பங்கேற்கின்றனர்.

200 பங்கேற்பாளர்கள்:

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

3 நாட்கள் மாநாடு:

சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் முதல் நாளன்று, கணித்தமிழும் மொழிக்கொள்கையும், மொழிக்கணிமைச் செயல்பாடு சமூகங்களின் மொழிக்கொள்கையையும் மொழித்திட்டமிடலையும் எவ்வாறு ஊக்கப்படுத்தமுடியும்.

வாசிப்புத் திறன் மேம்பாடு:

கணிணி, தகவல் தொழில்நுட்பமும் பணிக்கு முந்திய பயிற்சி ஆசிரியர்களும், 21ம் நூற்றாண்டில் ஆசிரிய மாணவர்களுக்கான தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் திறன், புதிய பரிணாமங்கள், 21ம் நூற்றாண்டு கற்றல் திறன்களில் அட்டைக் கணினி வழி தமிழ் மின்னூல் உருவாக்கம், மின்னூல் வழி மாணவர்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்துதல்.

இணையதளங்களின் பாதுகாப்பு:

குறுஞ்செயலி வடிவமைத்தல், வாட்ஸ்அப், விரைவுத் துலங்கல் குறிமுறை வழிக் கற்பித்தல், தமிழ் மற்றும் தமிழ் மென்பொருள் சந்தை உருவாக்கம், மாணவர்கள் தமிழ்கற்றல், கற்பித்தலில் இணையதளங்களின் பங்களிப்பு; எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்.

சுவடித்தேடல்கள்:

கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தியும், இலக்கணப்பிழைத்திருத்தியும்: வளர்ச்சியும் சவால்களும், சொல்தொகுதி மற்றும் சிறுவர் மொழிக் கற்றல், இணையவழிச் செவ்வியல் சுவடித் தேடல், தமிழ்ச் சொல்திருத்தி உருவாக்கம், கணினி மற்றும் இணையவழி தமிழ்க் கல்வி கற்றல், கற்பித்தல், சிலப்பதிகாரம் கற்றல் கற்பித்தலில் இணைய மூலங்கள்.

இணையத்தில் இணைவோம்:

"இன்றே இணையத்தில் இணைவோம்"(சமூக ஊடகங்களில் தமிழின் முன்னேற்றம்), மின் - கற்றல் வழியாக சங்க இலக்கியப் பாடல்கள் கற்றல் மற்றும் கற்பித்தல், மேல்நிலை வகுப்புகளில் கணினி வழித் தமிழ்ப்பாடம் கற்பித்தல், செவ்விலக்கியங்களைக் கற்பித்தலில் வெப்.2.0.

அறிஞர்களின் விளக்கம்:

தொழில் நுட்பங்கள், இருவழித் தொடர்புத்தளத்தின் கற்றல் வளங்கள் வாயிலாக மாணவர்கள் ஈடுபாட்டுடன் கற்றல், இலக்கியம் கற்பித்தலில் முகநூல் பயன்பாடு, மாணவர்களின் ஈடுபாடும் உயர்நிலைச் சிந்தனை வளர்ச்சியும் ஆகியவை தொடர்பாக ஆய்வுக்கட்டுரைகள் வெளியீடும் அறிஞர்களின் விளக்கமும் நடைபெறும்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்