சாதனைகள் பப்பாளி சாகுபடியில் விவசாயி சாதனை

பப்பாளி சாகுபடியில் விவசாயி சாதனை

பதிவர்: நிர்வாகி, வகை: சாதனைகள்  
படம்

ஜூலை.23, 2015:- சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, 30 சென்ட் நிலத்தில், பப்பாளி சாகுபடி செய்து, ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுகிறார்.

30 சென்ட்டில்...:சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு சொந்தமாக, இளம்பிள்ளை சாலையில், விவசாய நிலம் உள்ளது.


நிலத்தின் ஒரு பகுதி யில், 30 சென்ட்டில், பப்பாளி பயிரிட்டு, பழங் களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.பப்பாளி மரங்களுக்கு, செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை முற்றிலும் தவிர்த்து, இயற்கை உரங்களை கொண்டு வளர்க்கின்றனர்.

தற்போது, அறுவடைக்கு தயாரான நிலையில், பழங்களை, மார்க்கெட்டுக்கு அனுப்பாமல், விவசாய நிலம் அருகில், கடை விரித்து, வியாபாரம் செய்து வருகின்றனர். வெளி மார்க்கெட்டில், பப்பாளி, கிலோ, 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கும் நிலையில், இங்கு, 20 ரூபாய்க்கு விற்கின்றனர்.

விவசாய தம்பதி ராஜேந் திரன், சித்ரா கூறியதாவது:தோட்டக்கலைத் துறையால் சிபாரிசு செய்யப்பட்ட, 'கிராஸ்' ரக பப்பாளியை, நாங்கள் சாகுபடி செய்துள்ளோம். இந்த பழம், நாட்டு பழத்தின் ருசியை தாண்டி விடுவதோடு, சத்து மிக்கதாகவும் உள்ளதால், அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.இந்த பப்பாளி மரங்கள், இரண்டு ஆண்டு வரை பலன் கொடுக்கிறது. மாதத்துக்கு, இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்பதோடு, பராமரிப்பு செலவுகளும் குறைவு.ஆறு மாதத்துக்கு ஒரு அறுவடை என்ற வகையில், ஆண்டுக்கு இரண்டு அறுவடையில், 1 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

நல்ல பலன்:


பப்பாளியை பழுக்க வைக்க, கல், நைட்ரஜன் திரவம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது இல்லை. மரத்தில் பழுத்த பழத்தை பறித்து, அப்படியே கொடுக்கிறோம்.பழத்தை வாங்குபவர் கண் முன்னே, மரத்தில் இருந்து பறித்துக் கொடுப்பதால், திருப்தியுடன் வாங்குகின்றனர். பிற விவசாய பயிர்களை விட, பப்பாளி நல்ல பலனை கொடுக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்