இந்தியா நாகா தீவிரவாத அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதித்தது மத்திய அரசு

நாகா தீவிரவாத அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதித்தது மத்திய அரசு

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

செப் 17,2015:- மணிப்பூரில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களை நடத்தி வரும் நாகா தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சமூகவாத கவுன்சிலுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:  பல்வேறு தாக்குதல்களில் என்எஸ்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சமீபகால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட் டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  கப்லாங் தலைமையிலான இந்த அமைப்பில் சுமார் ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் வடகிழக்கு மாநில எல்லையோரப் பகுதியில் முகாமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் கடந்த ஜூன் 9-ம் தேதி ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள் பலியாயினர்.  சமீபத்தில் மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்ட என்எஸ்சிஎன்-ஐஎம், என்எஸ்சிஎன்-கே அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்