இந்தியா தமிழக அரசின் தீர்மானத்தை ஆய்வு செய்த பின் மத்திய அரசு முடிவு எடுக்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக அரசின் தீர்மானத்தை ஆய்வு செய்த பின் மத்திய அரசு முடிவு எடுக்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

செப் 17,2015:- தமிழக அரசின் தீர்மானத்தை ஆய்வு செய்த பின் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய நலனை மட்டும் அல்லாமல் இலங்கை தமிழர் நலனை சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும் என சென்னை செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி பேரவையில் தீமானம் எடுக்கப்படும்.

மேலும் தமிழகத்துக்கு கர்நாடகா சட்டப்படி தர வேண்டிய நீரை தந்தே ஆகவேண்டும். மேலும் காவிரி நீர் தரும் விவகாரத்தில் மத்திய அரசு தேவைப்பட்டால் தலையிடும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் பாமக நீடிப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். கூட்டணி முடிவை பொறுத்து அதிலுள்ள கட்சி தன நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்