சாதனைகள் தமிழக அரசு பள்ளி மாணவி சாதனை: மெக்சிகோவில் நடந்த மாநாட்டில் பங்கேற்பு

தமிழக அரசு பள்ளி மாணவி சாதனை: மெக்சிகோவில் நடந்த மாநாட்டில் பங்கேற்பு

பதிவர்: நிர்வாகி, வகை: சாதனைகள்  
படம்

அக் 01,2015:- மெக்சிகோ நாடு, உலக அளவில் பள்ளிக்கூட மாணவர்களின் புதுமையான திட்டங்களை வரவேற்று வருடந்தோறும் கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த வருடம் மெக்சிகோ மாநாட்டில் 21 நாடுகள் பங்கேற்றன. இந்திய அளவில் ஒரு மாணவி இந்த மாநாட்டில் பங்கேற்றார்.

அந்த மாணவியின் பெயர் மேக வர்ஷினி. இவர் கரூர் மாவட்டம் ஆச்சிமங்களம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அவர் படிக்கும் பள்ளியின் சுவர் இடிந்து காணப்பட்டது. அதனால் அவர் காலி பிளாஸ்டிக் பாட்டிலை செங்கலுக்கு பதிலாக பயன்படுத்தி அதை சுவராக கட்டலாம் என்ற திட்டத்தை வடிவமைத்தார். இது அனைவராலும் பாராட்டப்பட்டது. அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி மேகவர்ஷினி பல்வேறு தேர்வுகளுக்கு பின்னர் இந்திய அளவில் தேர்ந்து எடுக்கப்பட்டார். இவரது பெற்றோர் மங்கேஷ்கர்- அருள் புஷ்பம்.

மாணவி மேகவர்ஷினியை அவரது பள்ளிக்கூட ஆசிரியர் சசிரேகாவும், ஒருங்கிணைப்பாளர் சித்ராவும் மெக்சிகோ நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். அனைத்து நாடுகளும் மாணவி மேக வர்ஷினியை பாராட்டிய நிலையில் அவர் நேற்று சென்னை வந்து சேர்ந்தார். அவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஆகியோர் பாராட்டினார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்