பத்துப் பாத்திரம் தேய்த்தால் மன அழுத்தம் குறையுமாம் - சொல்கிறது புதிய ஆய்வு

அக் 04,2015:- மிகவும் மன அழுத்தமாக இருக்கிறீர்களா.. அதைக் குறைக்க வேண்டுமா.. கவலையே வேண்டாம். வீட்டின் சிங்க்கில் இருக்கும் அழுக்கு பாத்திரங்களை முழு கவனத்தோடு தேய்த்து முடியுங்கள். உங்கள் மனம் லேசாக மாறும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
பாத்திரங்களை கவனமாக தேய்த்து முடித்து, அதனை சுத்தம் செய்யும் போது, நமது மனதில் ஒரு நேர்மறையான சிந்தனைகள் உதிப்பதை, செயல்வடிவில் ஆய்வு செய்திருக்கிறார்கள் ப்ளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆடம் ஹேன்லி.
சுமார் 51 மாணவர்களைக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டதாகவும், இதில் பலரும், தங்கள் கவனத்தை செலுத்தி பாத்திரங்களை தேய்த்து முடித்த போது மனம் லேசாக இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.