உலகம் நேபாளத்தின் புதிய பிரதமராக கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒளி

நேபாளத்தின் புதிய பிரதமராக கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒளி

பதிவர்: நிர்வாகி, வகை: உலகம்  
படம்

அக் 11,2015:- நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை ஏழு மாகாணங்களாக பிரிக்க இந்த புதிய அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் பாதிப்படைவதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது.

புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதால் பிரதமராக இருந்த சுஷில் கொய்ராலா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

இதனையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பணியில் நேபாளம் இறங்கியது. நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததால், பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் நேபாள பிரதமரை தேர்வு செய்யும் நடமுறைகளுக்கு அந்நாட்டு அதிபர் ராம்நரன் யாதவ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய பிரதமர் தேர்வு செய்யும் பணி நடந்தது. புதிய பிரதமர் பதவிக்கு ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒளிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலாக்கும் கடும் போட்டி நிலவியது.

இதில் பெருன்பான்மை வாக்குகள் பெற்று ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒலி அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்