பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக்.: உண்மையை போட்டுடைத்தார் மாஜி அமைச்சர்

அக் 13,2015:- அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் விருந்தினராக பதுங்கியிருந்தான் என அந்நாட்டு முன்னாள் அமைச்சர் உண்மையை போட்டுடைத்தார்.
பயங்கரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டிவிடுகிறது என இந்தியா ஒவ்வொரு முறையும் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. தற்போது அந்நாட்டு முன்னாள் ராணுவ அமைச்சர் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானின் விருந்தாளியாக இருந்ததை அம்பலப்படுத்தியுள்ளார் 2001-ம் ஆண்டு செப்11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையமான இரட்டை கோபுரம் அல்கொய்தா பயங்கரவாதிகளால் விமானம் மூலம் தாக்குதலுக்குள்ளானது. அந்த அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தேடி வந்தது. இந்நிலையில் 2011-ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் புறநகரில் பின்லாடன் பதுங்கியிருந்தை, அமெரிக்காவின் நேவிசீல் படைகள் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்று பின்லாடன் உடலை கடலில் வீசிஎறிந்தனர்முன்னதாக பின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது எங்களுக்கு தெரியாது என அந்நாட்டு அரசு தொடர்ந்து தெரிவித்தது
இந்நிலையில் பாகிஸ்தானின் அப்போதை முன்னாள் பிரதமர் யுசுப் ராஸா கிலானி அமைச்சரவையில் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த சவுத்ரி அகமது முக்தர், கூறியதாவது:
பின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது அப்போதை அரசுக்கு நன்றாக தெரியும் .அவனை மறைவான இடத்தில் பதுங்கியிருக்குமாறு கூறி, விருந்தாளியாக நடத்தி வந்தோம்; இது அப்போதைய பிரதமராக கிலானிக்கும், அதிபர் சர்தாரிக்கும் நன்றாக தெரியும். பின்லாடனுக்கு பாக் அரசு மட்டுமின்றி, உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் பாக் ராணுவம் ஆகியவையும் உதவின. அப்போதைய ராணுவ அமைச்சராக இருந்த நான் எந்த உதவியும் செய்யவில்லை. எனினும் அப்போதைய உள்துறை அமைச்சராக பதவி வகித்த ரஹ்மான் மாலிக்கிடம் விசாரணை நடத்தினால் தெரியவரும் என்றார்
முன்னாள் அமைச்சரின் இந்த பகீர வாக்குமூலம் ,பயங்கரவாதத்தினை ஒடுக்குவதாக தொடர்நது பொய் பேசிவந்த அந்நாட்டு அரசின் முகமூடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.