"வேளாண்மை செம்மல்" விருது பெற்ற விவசாயி கிருஷ்ணன்!

விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தி, சூரிய ஒளி மின்சாரத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி செய்து சாதித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி.
அவருக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் ‘வேளாண்மை செம்மல்’ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
நெல் சாகுபடியில் மின்தடை, தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட சோதனைகளை கடந்து, சராசரியாக ஏக்க ருக்கு 2,000 முதல் 3,000 கிலோ மக சூல் பெறுவதே அரிதான விஷயம்.
மதுரை அருகே குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி வி. கிருஷ்ணன், விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, ஏக்கருக்கு சராசரியாக 4,500 கிலோ முதல் 4,800 கிலோ வரை நெல் மகசூல் செய்து சாதித்து வருகிறார்.
இவருக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ‘வேளாண்மை செம்மல்’ விருது வழங்கி கவுரவித்துள்ளது.