முதியவரை ஷூ காலால் எட்டி உதைக்கும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி

குஜராத் மாநில பாரதிய ஜனதா எம்.பி. விட்டல் ரடாடியா நிகழ்ச்சி ஒன்றில் மனு கொடுக்க வந்த ஒரு முதியவரை ஷூ காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. விட்டல் ரடாடியா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
அப்போது அவரிடம் மனு அளிக்க முயன்ற முதியவர் ஒருவரை விட்டல் ரடாடியா காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு சமூக வலைத்தள பயனாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
கடந்த 2012-ம் ஆண்டு சுங்கச்சாவடி ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்திலும் இவர் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.