இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் முதலிடம்

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம். பெங்களூரு முதலிடம் பிடித்து உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி.மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம். பெங்களூரு முதலிடம் பிடித்து உள்ளது.
தேசிய கல்விநிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF)பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. பட்டியலின்படி பொறியியல் கல்லூரிகளில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் முதலிடம் பிடித்து உள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஐ.ஐ.டி. மும்பை மற்றும் ஐ.ஐ.டி. கோரக்பூர் பிடித்து உள்ளது. மேலாண்மை கல்வி நிறுவனங்களில் பெங்களூர் ஐ.ஐ.எம். முதலிடம் பிடித்து உள்ளது. ஐ.ஐ.எம். ஆமதாபாத் இரண்டாவது இடத்தையும், ஐ.ஐ.எம். கொல்கத்தா 3-வது இடத்தையும் பிடித்து உள்ளது.
இந்திய அறிவியல் கழகம் பெங்களூர் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மருந்தியல் கல்வி நிறுவனத்தில் மணிபால் மருந்து அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்து உள்ளது. மத்திய அரசு நிதியுதவி பெறும் 122 கல்வி நிறுவனங்கள் முதல்கட்ட தரவரிசை சுற்றில் இடம்பெற்று உள்ளது. என்.ஐ.ஆர்.எப். பட்டியலானது இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.
பிரிவு ஏ - ஆராய்ச்சியில் கவனம் கொண்ட சுயாட்சி கல்வி நிறுவனங்கள்.
பிரிவு பி - ஒரு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய, கல்வியலில் ஆர்வம் காட்டும் கல்லூரிகள் மற்றும் சென்டர்கள்.