தமிழின் சிறப்புகள் ஔவையாரின் சாதி ஒழிப்பு!

ஔவையாரின் சாதி ஒழிப்பு!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழின் சிறப்புகள்  
படம்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் எழுதியது...

விளக்கம்:
மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம்... நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்.

 

இதே போல் மற்றறொரு பாடலில்...... 

சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வர்சிரியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே நல்ல
குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்


பொருள்:
பிறர் கேட்காமலேயே உதவுபவர்கள் உயர்ந்தவர்கள், வண்மையானவர்கள்... பிறர் கேட்ட பிறகு உதவுபவர்கள் சிறியவர், சாதாரணமானவர்கள்... பிறர் கேட்ட பின்பும் உதவாமல் இருப்பவர் கயவர்கள், பெருந்த்தன்மையற்றவர்கள்...

இவர்கள் பலா, மா மற்றும் பாதிரி மரங்களை போன்றவர்கள்... பலாமரம் தான் பழம் தரப்போவதை "பூ" பூத்து அறிவிக்காமல் காய் காய்க்கும்... மாமரம் தான் பழம் தரப்போவதை "பூ" பூத்து அறிவித்து காய் காய்க்கும்... பாதிரி மரம் "பூ" பூக்கும் ஆனால் காய்க்காது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்