தமிழின் சிறப்புகள் தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகம்!

தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகம்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழின் சிறப்புகள்  
படம்

இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து  தமிழ் மொழி வளர்க்கப்பட்டது.  இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும்,  பெரிய அளவில் ஆன்மிகம் தான்,  தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

குறிப்பாக அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம்,  மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், ஆகிய சைவ சமயத்தின் மூலமாக  தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது.

அதே போல் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய  வைணவ சமயத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது.  

இவ்வாறு ஆன்மிகமும் தமிழ் மொழியும்  பிரிக்க முடியாதவகையில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் என்றும் இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஆன்மிகத்தின் மூலம்  தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்:


 பதினென் சித்தர்கள்:
 அகத்தியர்,போகர், கோரக்கர், மச்சமுனி, சட்டைமுனி,  திருமூலர், நந்தி,  கொங்கணர், ராமதேவர், பதஞ்சலி, குதம்பை முனிவர், கரூவூரார், தன்வந்திரி, வாசமுனி,  இடைக்காடர், கமலமுனி, சுந்தரானந்தர், பாம்பாட்டி சித்தர்


 மன்னர்கள்:
சேரன் செங்குட்டுவன், கரிகால் சோழன், ராஜசோழன், உக்கிர பாண்டின், அதிவீரராம பாண்டியன்.


புலவர்கள்:
நக்கீரர், அவ்வையார்,காரைக்கால் அம்மையார்,
பாணபத்திரர்,  சீத்தலை சாத்தனார், கம்பர், பாரதியார், திரிகூட ராசப்பக்கவிராயர், இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முதுசூரியர், இளங்கோவடிகள், திரு.வி.க., ஆன்மிக வாதிகள்
பாம்பன் சுவாமிகள், முத்துக்குமார சுவாமிகள், குமரகுருபரர், சங்கரதாஸ் சுவாமிகள், வள்ளலார்,  கிருபானந்த வாரியார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்