மனிதன் மற்றும் தமிழனத்தின் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

இன்றைய காலகட்டத்தில், வெஸ்டன் கக்கூஸ் கூட பயன்படுத்த தெரியாமல் நம் நாட்டில் பலகோடி பேர், தான் மேற்கத்தியத்தை பின்பற்றுபவன் ("I'm westeized..") என்று பீலாய் விட்டு திரிகின்றனர்.
மனிதனாக மருவிய இனம் பேசிய முதல் மொழி தமிழ்.
நாகரீகத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள். உலகிலேயே ஓர் மொழியை இனம் என்றும் கூறும் கூற்றுடைய மொழி தமிழ். தமிழர்கள் ஓர் பிரிவினர்கள் அல்ல, மனித இனத்தின் ஆணிவேர்.
மொழிக்கு மட்டுமின்றி வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தவன் தமிழன்.
இன்றோ அதை எல்லாம் மறந்து மீண்டும் நாணம், வெட்கம்,என அனைத்தையும் அறுத்தெறிந்து மீண்டும் அம்மணமாய் திரிய மேற்கத்தியத்தை கட்டி அழுதுக்கொண்டு இருக்கிறோம். தமிழன் மட்டும் அல்ல மனிதர்கள் யாவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய தமிழனத்தின் எழுச்சியைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்....
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் உலகில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா என்ற கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய மாநில இடங்களில் மனித இனம் வாழத் தொடங்கி சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் காலக்கட்டம்.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000 நியாண்டெர்தல்
மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
உலகின் முதல் மொழியாக நம் தாய் மொழி "உலக தமிழ் செம்மொழி" தமிழ் மொழியின் தோற்றம் ஏற்பட்ட காலகட்டம்.
கி.மு. 50000 - 35000
தமிழ் மொழியிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு ஏற்பட்டது.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் எல்லாம் தமிழ் மொழியிலிருந்து பிரிந்ந காலகட்டம்.
கி-மு. 20000 - 10000
இந்தோ ஐரோப்பிய மொழிகள் எனப்படும் ஒளியர் கிளைமொழிகள் தமிழ் மொழியிலிருந்து பிரிந்த காலகட்டம்.
கி-மு. 10527
பாண்டிய மன்னன் காய்கினவழுதி முதல் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த காலகட்டம் இது. 4449 புலவர்கள் கூடி, முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இங்கு தான் இயற்றினார்.
கி.மு. 10000
கடைசி பனிக்காலம் முற்றுப்பெற்றது. இந்த காலகட்டத்தில், உலக மக்சுள் தொகை 4 மில்லியன்ஆகவும்.. குமரிக்கணடம் தமிழர் மக்கள்தொகை 1,00,000 ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
கி.மு. 6087
மனிதர்கள் மற்றும் தமிழினம் தோன்றிய தாய் மடியான இலெமோரியா எனப்படும் குமரிக் கண்டம், கடல் கொந்தளிப்பில் மூழ்கி அழிந்தது.
கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்ட பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன், இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் இங்கு தான் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். முகஞ்சதாரோ, ஹரப்பா அடங்கிய சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கிய காலகட்டம் இது தான்.
கி.மு. 4000
சிந்து சமவெளியை சேர்ந்த மக்கள் தொகை 10 லட்சமாக உயந்தது. மற்றும் கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம் ஆனா காலகட்டம்.
கி.மு - 3200
சிந்து சமவெளியினர், 27 விண்மீன்களை பற்றிய இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைப்பாட்டைக் கண்டரிந்தினர்.
கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பமான காலகட்டம் இது.
கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைக்கத் தொடங்கிய காலகட்டமும் இதுதான்.
கி.மு - 3100 - 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. மற்றும் ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம்.
கி.மு - 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் கூடி நடந்ததாக கருதப்படும் காலகட்டம் இது.
கி.மு. - 1316
மகாபாரதத்தை வசிஸ்டர் எழுதிய காலகட்டம் இது தான் என்று கருதப்படுகிறது.
கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியனாக உயர்ந்தது..