மோடி பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் 5,650 விவசாயிகள் தற்கொலை!

ஜூலை.19, 2015:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற ஓராண்டு முடிவடைந்த நிலையில், விவசாய நாடு என்று போற்றப்படும் நமது நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டனர் என்று அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.
மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட் டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் இடம்பெற் றுள்ளது.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு விபத்து களால் உயிரிழந்தோர் மற்றும் தற்கொலை செய்துகொண்டோர் எனும் தலைப்பில் இந்த ஆய்வறிக்கை அண்மை யில் வெளியிடப்பட்டது.
ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வரும் இதுபோன்ற ஆய்வறிக் கைகளில் சாலை விபத்து களால் உயிரிழந்தோர், தற்கொலை செய்து கொண்டோர் அகியோ ரின் விவரங்கள் மட்டுமே இடம்பெறும். தற்போது முதன் முறையாக, நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவரங்களும், அதற்கான காரணங்களும் ஆய்வறிக்கையில் வெளி யிடப்பட்டுள்ளன.
நிலம் கையகப்படுத் துதல் சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், இந்த ஆய்வறிக் கையில் உள்ள புள்ளி விவரங்கள் விவசாயிகள் தற்கொலைக்கான கார ணத்தை விளக்கியுள்ளன. இந்த ஆய்வறிக்கை யின் முக்கிய விவரங்கள் வருமாறு:
நம் நாட்டில் விவசா யத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சார்ந்திருப்போர் சுமார் 48.4 சதவீதம் பேர். 2014- இல் நாடு முழுவதும் மொத்தம் 1,31,666 தற் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் விவசாயிகள் மட்டும் 5,650 பேர். இதில் ஆண் கள் 5,178 பேரும், பெண்கள் 472 பேரும் அடங்குவர்.
மேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயி களில் சிறு விவசாயிகள் (2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ளவர்கள்) 44.5 சதவீதம் பேரும், குறு விவசாயிகள் (ஒரு ஏக் கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ளவர்கள்) 27.9 சதவீதம் பேரும் உயிரிழந் தனர்.
மகாராஷ்டிரம் முதலிடம்
நாட்டிலேயே விவசா யிகள் அதிகளவில் தற் கொலை செய்துகொள் ளும் மாநிலமாக மகா ராஷ்டிரம் உள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் 2,568 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அடுத்ததாக தெலங்கானா மாநிலத்தில் 898, மத்திய பிரதேசத்தில் 826 பேரும், சத்தீஸ்கரில் 443, கருநாட கத்தில் 321, ஆந்திரத்தில் 160 விவசாயிகள் தற் கொலை செய்துகொண் டனர். தமிழகத்தில் 68 விவசாயிகளும், உத்தரப் பிரதேசத்தில் 63 பேரும் கடந்த ஆண்டு உயிரிழந் தனர். உயிரிழந்தவர்களில் 65.7 சதவீதம் பேர், 30 முதல் 40 வயதுக்கு உள் பட்டவர்கள். 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட விவ சாயிகள் 23 சதவீதம் பேர்.
விவசாயிகள் தற் கொலை செய்து கொள் வதற்கு பல்வேறு கார ணங்களை தேசிய குற்ற ஆவண காப்பக ஆய் வறிக்கை முன்வைத்துள் ளது. இதில், வங்கியில் கடனை செலுத்த முடி யாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் (20.6 சதவீதம்), குடும்ப பிரச்சினை காரணமாக (20.1 சதவீதம்), பயிர் இழப்பு (16.8 சதவீதம்), உடல்நலம் பாதிப்பு (13.2 சதவீதம்), போதைப் பொருள் அல்லது மது அருந்துதல் (4.9 சதவீதம்) போன்ற காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வங்கிக் கடன் செலுத்த முடியாமல்...
வங்கியில் கடனை செலுத்த முடியாமல், மகாராஷ்டிர மாநிலத்தில் 765 விவசாயிகளும், தெலங்கானாவில் 146 விவ சாயிகளும் தற்கொலை செய்து கொண்டனர். பயிர் இழப்பு காரணமாக 87.5 சதவீத விவசாயிகள் இமாசல பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந் துள்ளது.
கடந்த 2014 மே மாதம் பா.ஜ.க. மோடி தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றது குறிப் பிடத்தக்கதாகும்.