இனி நினைச்ச இடத்துல மழை பெய்ய வைக்கலாம்..!

ஆக.08, 2015:- "அண்ணே ஒரு டீ..!" என்று ஆர்டர் செய்வது போல "வருட பகவானே கொஞ்சம் மழை..!" என்று ஆர்டர் செய்தவுடன் மழை பொழிந்தால் எப்படி இருக்கும்..?! தோடா செம்ம ஜோக்குனு சிரிப்பீங்க தானே..?
இந்த மேட்டர் அந்த நக்கல் சிரிப்பை ஸ்டாப் செய்து விடும் - தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் மழை பெய்ய வைக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது..!
டெசர்ட் கிரீன்னீங் நிறுவனம் பாலைவனங்களை விவசாயம் செய்ய ஏதுவான நிலங்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அண்டார்ட்டிக்காவையும் சேர்த்து உலகின் மூன்றில் ஒரு பங்கு பாலைவனமாக இருக்கிறது.
மேலும் அவைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை குறைத்துக் கொண்டே போகின்ற நிலையை மனதிற் கொண்டுதான் இந்நிறுவனம் 2005-ஆம் ஆண்டில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு, கடந்த 10 ஆண்டுகளில் பாலைவன விவசாயத்தை 300 மடங்கு உயர்த்தியுள்ளது..!
அல்ஜீரிய பாலைவனத்தில் இந்த கருவியை பொருத்தி தற்போது அங்கே ஆப்பிள், எலுமிச்சம் போன்ற 3000 பழவகை மரங்கள், கணக்கில் அடங்காத காய்கறி செடிகள் உருவாக இந்த கருவி காரணமாக இருக்கிறது.
இதனினை கொண்டு 200 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்தும் கூட மழையை வரவழைக்க முடியுமாம்..!