தங்க பத்திரம் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஜெட்லி தகவல்

செப் 17,2015:- பொதுமக்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பணமாக்கும் திட்டம், தங்க பத்திரம் ஆகிய 2 திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த திட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவை பாதுகாப்பான மற்றும் பொரு ளாதார ரீதியாக நிலையானவை ஆகும் என்றார்.
நம் நாட்டில் சுமார் 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாகக் கணக் கிடப்பட்டுள்ளது.
இதில் பெரும் பாலான தங்கம் பயன்படுத்தப் படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதை மறுசுழற்சி அடிப்படையில் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப் படும் என்று பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்டது. அதன்படி, 2 திட்டங் களுக்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் வழங்கியது. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை ஓராண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு வங்கிகளில் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்சம் 30 கிராம் முதலீடு செய்ய வேண்டும். முதிர்வு காலத்தின்போது, அப்போது உள்ள மதிப்புக்கேற்ப வட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் தங்கத்தை நகை உற்பத்தியாளர்களுக்கு வங்கிகள் விற்பனை செய்யும். இதனால் இறக்குமதி குறையும். அடுத்தபடியாக முதலீட்டுக்காக தங்கத்தை நாணயமாக வாங்குபவர்கள் இனி தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம். 5, 10, 50, 100 கிராம் தங்கத்தின் மதிப்புக்கு நிகரான பத்திரங்கள் கிடைக்கும்.
அதிகபட்சமாக ஆண்டுக்கு 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டு காலம் 5 முதல் 7 வருடங்கள். வட்டி விகிதம் முதலீடு செய்யும்போது உள்ள நிலைமைக்கேற்ப நிர்ணயிக்கப் படும். முதிர்வு காலத்தில் பணமாகவோ, தங்கமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.