இந்தியா கடனைக் கட்ட முடியாமல் 2 கர்நாடக விவசாயிகள் தற்கொலை!

கடனைக் கட்ட முடியாமல் 2 கர்நாடக விவசாயிகள் தற்கொலை!

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

அக் 02,2015:- கர்நாடகாவில் விவசாயக் கடனை கட்ட முடியாமல் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கபல்லாபூர் மாவட்டம், நீடகுர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜாலப்பா. இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தின் விளைச்சலுக்காக நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

விளைச்சல் சேதமடைந்ததன் காரணமாக அறுவடை இல்லாமல், கடனை தீர்க்க முடியாமல் நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே போன்று ஹாவேரி மாவட்டம், ஹொசவீராபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி உதயகுமார். 35 வயதான இவர் விவசாயம் செய்வதற்காக மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால், மழையில்லாமல் விளைச்சல் காய்ந்த மனவேதனையில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்