இலங்கை தமிழகத்தில் தங்கி இருந்த இலங்கை அகதிகளில் 73 அகதிகள் நாடு திரும்பினர்

தமிழகத்தில் தங்கி இருந்த இலங்கை அகதிகளில் 73 அகதிகள் நாடு திரும்பினர்

பதிவர்: நிர்வாகி, வகை: இலங்கை  
படம்

அக் 12,2015:- இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 73 பேர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடனேயே இந்த 73 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

நாங்கள் 1990 ஆம் ஆண்டு வவுனியாவிலிருந்து இந்தியாவிற்கு சென்றோம். ''நாம் மண்டபம் முகாமிற்கு செல்லும் போது எனக்கு ஒன்பது வயது. எனினும் நாங்கள் மீண்டும் எமது சொந்த நாட்டுக்கு செல்லவே விரும்புகின்றோம்'' என்று இந்தியாவில் வைத்து இலங்கை திரும்பும் வழியில் இலங்கையர் ஒருவர் கூறியிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது. எனினும் இன்னும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இந்தியாவின் தமிழகத்தில் பல முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை 12, 500 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளதாகவும், அவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்