இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒருவர் மரணம்

அக் 11,2015:- இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளால், நான்கு நிமிடத்திற்கு ஒருவர் மரணமடைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்து தொண்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள், டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய சாலைகளில் பாதுகாப்பற்ற வாகனங்களால் ஏற்படும் குறைகளை களைதல் என்ற பெயரில்
வெளியிடப்பட்டன.
உலகத்திலேயே, இரண்டாவது பெரிய சாலை நெட்வொர்க் இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், மட்டும் சாலை விபத்துகளில் மட்டும் சிக்கி 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில், 4 நிமிடத்திற்கு ஒருவர் சாலை விபத்தின் மூலம் மரணமடைகிறார். இதன் மூலம், நாட்டிற்கு ரூ. 3.8 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் அளவிற்கு செலவு ஆகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்கிபெருகி வரும் வாகனங்களால், சாலை விபத்துகளின் அளவும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால், 2020ம் ஆண்டில், 3 நிமிடத்திற்கு ஒரு இந்தியர் மரணம் என்ற நிலை உருவாகி விடும் அபாயம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.