ஆபாச இணையதளத்தை தேடும் நகரங்களின் வரிசையில் சர்வதேச அளவில் டெல்லி முதலிடம்

அக் 11,2015:- ஆபாச இணைய தளத்தை ஆர்வமாக தேடுவதில் சர்வதேச அளவில் டெல்லி முதலிடம் வகிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஆபாச இணையதளத்தை கூகுளில் தேடிப்பார்க்கும் பழக்கம் எல்லா நாட்டினருக்கும் உண்டு. இதில் இந்தியாவும் அடக்கம்.
Po என்ற வார்த்தையப் பயன்படுத்தி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கூகுளில் அதிகமாக ஆபாச இணையதளத்தை தேடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் 10ல் முதல் 6 இடங்களில் இந்தியாவில் உள்ள நகரங்கள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக, தலைநகர் டெல்லி அதில் முதலிடத்தில் இருக்கிறது. டெல்லிக்கு அடுத்து வரிசையாக புனே, மும்பை, ஹவுரா, உன்னாவோ, கோலாலம்பூர்,பெங்களூர் போன்ற நகரங்கள் உள்ளன. இந்த வரிசையில் சென்னை இடம் பெறவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விசயம்.
இதில் ஆச்சர்ய தகவல் என்னவென்றால்,அமெரிக்கா,ரஷ்யா,இங்கிலாந்து போன்ற வெளி நாடுகள் இந்த டாப் 10 வரிசையில் இல்லை. ஒருவேளை அந்த நாடுகளில் உள்ளவர்கள் கூகுலுக்குப் பதிலாக வேறு எதாவது மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கலாம். இல்லையெனில், நேரிடையாக ஆபாச இணையதளங்களில் தளத்துக்கே போய் பார்க்கலாம்.
இருந்தாலும், உலகத்திலேயே டில்லிதான் ஆபாச இணையதளத்தை தேடுவதில் முதலிடம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் டெல்லியில் பெரும்பாலான் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்களோ என்னவோ!