35 வயதில் கண்ணாடி அணிந்தேன்... 60 வயதில் அதை அகற்றிவிட்டேன் : நம்மாழ்வார்

டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே...!
ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச்சாப்பிடப்போறீங்க ?
விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல, குடலியல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள்,பொருளாதார நிபுணர்கள் எண்ணவேண்டும். ரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் கோதுமை, நெல் உள்ளிட்டவை விஷமாகிவிட்டன.
இதை உண்ணும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். பஞ்சாப்-ராஜஸ்தான் இடையே கேன்சர் ரயில் என்ற பெயரில் ரயில் இயக்கப்படுகிறது.இதில் புற்றுநோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக செல்கின்றனர்.
இந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. விவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா?
நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ... அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன்.
இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது.
அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள.
வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி அதைத் தடுக்கக்கூடாது.
- வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.