சாதனைகள் மாயமான விமானம் : சேலம் என்ஜினீயரிங் கல்லூரி ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு

மாயமான விமானம் : சேலம் என்ஜினீயரிங் கல்லூரி ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு

பதிவர்: நிர்வாகி, வகை: சாதனைகள்  
படம்

ஜூலை.04, 2015:- சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் வகிதா பானு தலைமையிலான ஆராய்ச்சியாளகள் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஆராய்ச்சியாளர் மற்றும் அரசு ஆராய்ச்சி மையம் இணைந்து மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள் மேம்படுத்தும் விதமாக பல்வேறு ஆராய்சிகள் செய்து வருகின்றனர்.

இந்த அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளினால் அதிர்வுகளை கொண்டு லேசர் முறையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவில் காணாமல் போன விமானத்தை குறிப்பாக கடல் பகுதியில் இந்த இடத்தில் விழுந்து உள்ளது என்று துல்லியமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து கூறினர். இதை கொண்டு அந்த விமானத்தை மீட்டனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு கண்டுபிடிக்க முடியாத விமானத்தை சேலம் அரசு பொறியியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தற்போது விமான மீட்புக்கு உதவி உள்ளனர்.

இது குறித்து சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் வகிதா பானு கூறியதாவது:

சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் மேம்படும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி குழுவினர் ஆகியோர் இணைந்து அறிவியல் சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்து வருகிறோம். இதை மேம்படுத்தும் விதமாக ஒலி மற்றும் ஒளி அதிர்வுகளை கொண்டு பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு உள்ளோம்.

இதே போன்று தற்போது இந்திய விமான படைக்கு சொந்தமான விமானத்தை தற்போது அதிர்வலைகளை கொண்டு எனது தலைமையிலான அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து குறிப்பிட்ட இடத்தில் இருப்பதை கூறி உள்ளோம். இதனால் இந்த பகுதியில் தேடி வருகின்றனர். விரைவில் இந்த விமானம் மீட்டு எடுப்பார்கள் என்று நம்பிக்கையாக உள்ளோம் என தெரிவித்தனர்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்