படித்ததில் பிடித்தது திண்டுக்கல் கல்லூரி பேராசிரியர் எஸ்.செந்தில்குமரனுக்கு சர்வதேச விருது!

திண்டுக்கல் கல்லூரி பேராசிரியர் எஸ்.செந்தில்குமரனுக்கு சர்வதேச விருது!

பதிவர்: நிர்வாகி, வகை: படித்ததில் பிடித்தது  
படம்

மே.16, 2015:- திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் எஸ்.செந்தில்குமரனுக்கு சர்வதேச சிறந்த மறு ஆய்வாளருக்கான விருது கிடைத்தது.

இங்கிலாந்தில் இயங்கும் 'எல்ஸ்வேர் ஜேர்னல்' என்ற அமைப்பு அறிவியல், மருத்துவம், பொறியியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த 'ஜேர்னல்' ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்ய ஒவ்வொரு துறைக்கும் சர்வதேச அளவில் மறு ஆய்வாளர்களை நியமித்துள்ளது. அவர்கள் முழுமையாக மறு ஆய்வு செய்தபின்பே கட்டுரைகள் வெளியிடப்படும்.

இதில் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறைத்தலைவர் செந்தில்குமரன் 'ஆற்றல் பிரிவில்' 110 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டார். இதற்காக அவர் ஆற்றல் பிரிவில் மறு ஆய்வாளராக 2 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அவரது மறு ஆய்வின் பணியை பாராட்டி சர்வதேச அளவில் மிகச்சிறந்த மறு ஆய்வாளர் விருதை 'எல்ஸ்வேர் ஜேர்னல்' வழங்கியுள்ளது.

செந்தில்குமரன் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகளில் 65 ஆய்வு கட்டுரைகளை மறு ஆய்வு செய்தேன். இதில் எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக செய்ததால் விருது கிடைத்தது. மேலும் ஆயுள் முழுவதும் 'ஜேர்னலில்' வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளை பதிவிறக்கம் (ரூ.15 லட்சம் மதிப்பு) செய்வதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி ஏராளமான ஆய்வு மாணவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன், என்றார். அவரை கல்லூரி இயக்குனர் சரவணன் பாராட்டினார். தொடர்புக்கு 99656 32100.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்